சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் ராஜ் (வயது 45). இவர் எலெக்ட்ரீசியன் பணிபுரிந்து வருகிறார். இவர் மது போதைக்கு அடிமையானதால் அவருடைய மனைவி தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதித்துள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ராஜ் மீண்டும் மதுவுக்கு அடிமையாகி தெருவில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் அவரது மனைவி கலா மீண்டும் தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதித்துள்ளார்.
இதனிடையே கடந்த அதிகாலையில் போதை மறுவாழ்வு மையத்தின் ஊழியர்கள் கலாவை செல்போனில் அழைத்து உங்களுடைய கணவர் கீழே விழுந்து விட்டதால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து உள்ளோம் என கூறியுள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கலா மருத்துவமனைக்கு விரைந்து உள்ளார். ஆனால் அங்கு அவரை கணவரை பார்க்க போதை மறுவாழ்வு மையத்தின் ஊழியர்கள் அவரை பார்க்க அனுமதிக்கவில்லை என தெரிகிறது.
இதனால் சந்தேகம் அடைந்த கலா காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தற்போது யுவராஜ், சதீஸ், சரவணன், செல்வமணி, கேசவன், மோகன் ஆகியோரை வழக்குப்பதிவு செய்து கைதுசெய்துள்ளனர். மேலும், மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி லோகேஸ்வரி ஆகியோரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.