Connect with us

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

News

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

8c6ce812af3ef1498086cce2bd3a2c94

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் சமீபத்தில் அறிவித்திருந்தார் என்பது தெரிந்ததே 

மேலும் நீட் தேர்வு இந்த ஆண்டு செப்டம்பர் பன்னிரண்டாம் தேதி நடைபெறும் என்றும் இந்த தேர்வுக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு, ஒரு சில மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் ஆகியவை கருத்தில் கொண்டு தற்போது நீட் தேர்வுக்கான விண்ணப்பம் செய்யும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 6ஆம் தேதி கடைசி தேதி என்று இருந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 10-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட் தேர்வுக்கான விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை ஏற்கனவே விண்ணப்பம் செய்தவர்கள் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து நீட் தேர்வுக்கான விண்ணப்பம் தாக்கல் செய்பவர்கள் ஆகஸ்ட் 10 ஆம் தேதியை மனதில் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top