Connect with us

சீமை கருவேல மரங்களை அகற்ற காலக்கெடு! ஹைகோர்ட்டில் தமிழக அரசு;

karuvela maram

தமிழகம்

சீமை கருவேல மரங்களை அகற்ற காலக்கெடு! ஹைகோர்ட்டில் தமிழக அரசு;

சீமை கருவேல மரங்களை அகற்ற காலக்கெடு! ஹைகோர்ட்டில் தமிழக அரசு;

நம் தமிழகத்தில் அதிகளவு சீமை கருவேல மரங்கள் காணப்படுகிறது. இவை வேரோடு விட்டுவிட்டால் அதிகமாக வளரும் தன்னை கொண்டு உள்ளது. ஏனென்றால் இவை அதிக அளவில் பூமிக்குள் சென்று உறுதியாகப் பற்றிக்கொண்டு நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை கொண்டுள்ளது.

எனவே இவற்றை அகற்ற தினம்தோறும் பலரும் மனு தாக்கல் செய்து கொண்டு வருகின்றனர். சீமை கருவேல மரங்களை அகற்ற காலக்கேடு கூறப்பட்டுள்ளது. அதன்படி சீமை கருவேலமரங்களை படிப்படியாக 10 ஆண்டுகளில் முழுமையாக அப்புறப்படுத்த காலநிர்ணயம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

அதற்கு அடுத்த 5 ஆண்டுகளில் மீண்டும் வளராமல் கண்காணிப்பதற்கும் செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சையது முசாமில் அப்பாஸ் அறிக்கை தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் பரவியுள்ள 196 வகையான அண்ணிய மரங்களில் 23 வகையானவற்றை அப்புறப்படுத்த முன்னுரிமை வழங்க பட்டுள்ளது என்று தமிழக அரசு கூறியுள்ளது. 700 ஹெக்டர் பரப்பில் பரவியுள்ள அந்நிய மரங்களை அகற்றும் திட்டத்திற்கு ரூ 5.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top