மின் சேவை இணைப்பு எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை (பிப்ரவரி 15) கடைசி நாள்.ஆகும்.
மின் நுகர்வோர் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதளத்தில் மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட்டு தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கலாம்.
தமிழகம் முழுவதும் சுமார் 2.33 கோடி வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளதாக தகவல்.இது தவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன.
இதில் வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.
அரசு மானியம் தொடர்ந்து பெறுவதற்கு, வீடு, குடிசைகள், விவசாயம், கைத்தறி மற்றும் விசைத்தறி ஆகிய பிரிவுகளின் சேவை இணைப்புகளுடன் ஆதார் இணைக்கப்படுவதை மாநில அரசு கட்டாயமாக்கியது.
தமிழகத்தில் உள்ள அனைத்து தகுதியான எரிசக்தி பயனாளர்களும் தங்களது மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று கேட்டு மின் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இரத்த சர்க்கரை அளவு – முருங்கை இலையின் முக்கியத்துவம்!
இதையொட்டி, மாநிலம் முழுவதும் 2,811 கோட்ட அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. முதலில் வழங்கப்பட்ட காலக்கெடு டிசம்பர் 31, இது ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டது, பின்னர் கடைசி காலக்கெடுவாக பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.