சிறையில் நடந்த மர்மம் என்ன? சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாற்றுத்திறனாளி! 3 போலீசார் இடைநீக்கம்!!
பொதுவாக திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார். ஆனாலும் அவர்கள் திருந்தி வாழ்வதற்காக இந்த சிறைத்தண்டனை அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த சிறையிலும் ஒருசில மர்மமான உயிரிழப்புகள் நிகழ்ந்துகொண்டே வருகிறது. சிறையில் மாற்றுத்திறனாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். அதன்படி திருட்டு வழக்கில் கைதான மாற்றுத்திறனாளி சிறையில் உயிரிழந்துள்ளதால் 3 போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சேந்தமங்கலம் போலீசார் சேலம் கருப்பூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன், மனைவி கம்சலாவையும் கைது செய்தனர். விசாரணையில் பிரபாகரன் தம்பதியிடம் இருந்து சுமார் 19 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
கைதான பிரபாகரன் மற்றும் மனைவி கம்சலா ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். நாமக்கல் சிறையில் புதன்கிழமை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பிரபாகரன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாற்றுத்திறனாளி பிரபாகரன் உயிரிழந்தார். இதனால் விசாரணைக்கு சேலம் பிஐஜி உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்குப்பின் 2 சப் இன்ஸ்பெக்டர், மற்றும் ஒரு காவலர் உள்பட 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
