திட்டக்குடி அருகே பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை பாசன வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோழியூர் கிராமம் உள்ளது இந்நிலையில் இந்த கிராமத்தின் அருகில் வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து செல்லும் பாசன வாய்க்கால் உள்ளது.
இந்த வாய்க்கால் உள்ள புதரில் பிறந்து சில மணி நேரங்களே ஆன தொப்புள்கொடி அறுக்காத நிலையில் பெண் குழந்தை ஒன்று சடலமாக கிடப்பதை பார்த்த அவ்வழியே சென்ற மக்கள் திட்டக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இதனை அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த திட்டக்குடி போலீசார் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் குழந்தையின் உடலை மீட்டு இந்த குழந்தை யாருடைய குழந்தை குழந்தையை பாசன வாய்க்காலில் வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.