Sports
டிவில்ல்லியர்ஸ், மேக்ஸ்வெல் அதிரடி: 38 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி
இன்று நடைபெற்று முடிந்த பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியின் டிவில்லியர்ஸ் மற்றும் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடியதன் காரணமாக 38 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராத் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கினார். விராட் கோலி 5 ரன்களிலும் ரஜத் படிதார் 1 ரன்னிலும் அவுட் ஆனாலும் அதன்பின் களமிறங்கிய மேக்ஸ்வெல் மற்றும் டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடினார்கள். மேக்ஸ்வெல் 78 ரன்களும், டிவில்லியர்ஸ் 76 ரன்களும், எடுத்ததை அடுத்து பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் குவித்தது
இதனை அடுத்து 205 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கொண்டே வந்தது. ஆண்ட்ரு ரஸல் ஓரளவுக்கு அதிரடியாக ஆடினாலும் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் மட்டுமே எடுத்தது
இதனை அடுத்து பெங்களூர் அணி வெற்றி பெற்றது என்பதும் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் டிவிலியர்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
