புஷ்பா படத்தின் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு பின்பு சமந்தாவுக்கு ஏராளமான ரசிகர்கள் மீண்டும் வந்தனர். ஏனென்றால் கவர்ச்சியான ஆட்டம் அனைவரையும் கட்டி இழுத்தது.
அதற்கு பின்பு தற்போது அவர் நடிப்பில் வெளியான காற்றுவாக்கில் இரண்டு காதல் திரைப்படத்தில் நயன்தாராவை விட சமந்தாவுக்கு தான் அதிக மவுசு என்று ரசிகர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஸ்டைலாக காணப்பட்டார்.
இதனால் கவர்ச்சியாகவும் ஸ்டைலாகவும் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக நடிப்பார் என்று திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அவர் நாள்தோறும் இணையதளத்தில் ஆக்டிவாக காணப்படுகிறார்.
அதுவும் அப்போது அவர் புதுப்புது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த போட்டோகளில் அவர் அணிந்திருக்கும் உடை ஆனது ரசிகர்களை சுண்டி இழுக்கும் போல் காணப்படுகிறது.
அந்த வகையில் தற்போது அவர் சிவப்பு நிற உடையில் போட்டோ ஷூட் நடத்தி இளைஞர்களை மீண்டும் தன் வசம் இழுத்துக் கொண்டு கட்டி வைத்துள்ளார். நடிகை சமந்தா அந்த போட்டோ படு கவர்ச்சியாகவும், பிட்னஸ் ஆகவும் இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் போட்டோவை கண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள்.