தாயின் கடைசி ஆசை! ஐசியூவில் நடைப்பெற்ற மகளின் திருமணம்..!!

பீகாரில் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த படி, தனது மகளின் திருமணத்தை நடத்தி வைத்த தாய் சிறிது நேரத்தில் உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம் கயா அடுத்துள்ள பாலி கிராமத்தைச் சேர்ந்தவர் பூனம் குமாரி வர்மா. இவருக்கு சாந்தினி ( வயது 26) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சுமித் கவுரவ் என்பவருடன் சாந்தினிக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டு இருந்தது.

குஷியோ குஷி!! TNPSC குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்ப்பு!!

இதற்கிடையில் மகளின் திருமண ஏற்பாட்டின் போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே உடல்நிலை மோசமடைந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், மகளின் திருமனம் தடைப்படாமல் நடக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். அதன் படி, கடைசி ஆசையாக மரண படிக்கையில் இருந்த தாய் முன்பு இளம் ஜோடிகள் கண்ணீர் மல்க திருமணம் செய்துகொண்டது.

எச்சரிகை; 42 அடியை எட்டியது முல்லை பெரியாறு அணை..!!

இந்த சூழலில் அவர்களை வாழ்த்திய தாய் சிறிது நேரத்திலேயே உயிரை விட்ட சம்பவம் மணமக்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது. இத்தகைய சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.