பிபின் ராவத்தின் வீட்டில் அஞ்சலி; கண்ணீர் மல்க பெற்றோரின் உடல் அருகே நிற்கும் மகள்கள்! ஆறுதல் கூறிய அமித்ஷா;

செவ்வாய்க்கிழமை அன்று நீலகிரியில் கோர சம்பவம் நிகழ்ந்தது. இந்திய ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே கீழே விழுந்து 13 பேர் உயிரிழந்தனர். அதில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட பதிமூன்று ராணுவ வீரர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

coonoor

அவர்களுக்கு நேற்றைய தினம் நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி மைதானத்தில் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் இன்று காலை டெல்லிக்கு அவர்களின் உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ராணுவ வீரர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இரண்டு மகள்களும் கண்ணீர் மல்க தந்தை தாய் உடல் அருகே நிற்கின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிபின் ராவத் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பிபின் ராவத் மனைவி மதுலிகா ராவத் உடலுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி செலுத்தினார். பிபின் ராவத் மகள்கள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆறுதல் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment