பெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தந்தை கைது!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே பெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்துள்ள சிறு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். கூலித்தொழிலாளியான இவரது மனைவி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் 3 பெண் குழந்தைகளையும் கார்த்திக் வளர்த்து வந்ததாக தெரிகிறது.

அதிர்ச்சி! லிஃப்டில் சிக்கிய அமைச்சர் சிவசங்கர்… பெரம்பலூரில் பரபரப்பு!

இந்த சூழலில் மது பழக்கத்திற்கு அடிமையாக கார்த்திக் 13வயதான மூத்த மகள் ( மாற்றுத்திறனாளி) தினமும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அறிந்த சுதாகர், ராஜேந்திரன் ஆகிய 2 பேரும் தந்தை, சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதற்கிடையில் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படவே அருகில் இருந்தவர்களிடன் தெரிவித்துள்ளனர். பின்னர் சமூக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

இருளர் பழங்குடிக்கு தரமற்ற கட்டிடம்: 2 பேர் பணியிடை நீக்கம்!!

இதனையடுத்து தகலறிந்த 2 பேர் தலைமறைவான நிலையில் தந்தை கார்த்திக்கை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், 3 சிறுமிகளும் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.