இன்றைய காலத்தில் திருமணம் என்றாலே மணப்பெண் அலங்காரம் தான். அலங்காரம் இல்லாத திருமணத்தை பார்ப்பது மிகவும் அரிதான ஒன்று. அதுமட்டுமல்ல திருமணத்திற்கு ஆகும் செலவை விட அலங்காரத்திற்கு ஆகும் செலவு தான் அதிகமாக இருக்கும். அந்த அளவிற்கு மணப்பெண் அலங்காரத்திற்கு செலவு செய்து வருகிறார்கள்.
ஆனால் பிரபல நடிகரின் மகள் ஒருவர் தனது இளநரையை மறைக்காமல் அப்படியே திருமணம் செய்து கொண்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல நடிகர் திலிப் ஜோஷியின் மகள் நியாதிக்கு சமீபத்தில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த திருமண புகைப்படங்கள் தான் இணையத்தில் டிரண்டாகி வருகிறது.
காரணம் நடிகர் ஜோஷியின் மகள் நியாதி அவரது திருமணத்தில் தன் இளநரையை மறைக்காமல் அப்படியே புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள நியாதி, “நீங்கள் நீங்களாகவே இருங்கள், யாருக்காகவும் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டாம்” என்ற அறிவுரையையும் கூறியுள்ளார்.
அதேபோல் நடிகர் திலிப் ஜோஷி, “இந்த அற்புதமான பயணத்தில் எனது மகள் நியாதி மற்றும் எனது குடும்பத்தில் புதிதாக இணையும் எனது மருமகன் யஷோவர்தன் ஆகியோர் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்! எங்களுக்கு ஆதரவாக இருப்பதன் மூலம் எங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.
திருமணத்தின்போது அழகாக இருக்க வேண்டும் என்று தான் பலரும் நினைப்பார்கள். ஆனால் நியாதி நான் நானாக இருக்க விரும்புகிறேன் என கூறி நரை முடியை மறைக்காமல் திருமணம் செய்ததை பலரும் பாராட்டி வருகிறார்கள்.