Connect with us

பிறந்து 11 நாளில் தத்துக் கொடுக்கப்பட்ட மகள். 23 ஆண்டுகள் கழித்து நெதர்லாந்தில் இருந்து தாயைக் காண ஓடோடி வந்த மகள்

Untitled 126

செய்திகள்

பிறந்து 11 நாளில் தத்துக் கொடுக்கப்பட்ட மகள். 23 ஆண்டுகள் கழித்து நெதர்லாந்தில் இருந்து தாயைக் காண ஓடோடி வந்த மகள்

பிறந்து 11 நாளில் தத்துக் கொடுக்கப்பட்ட மகள். 23 ஆண்டுகள் கழித்து நெதர்லாந்தில் இருந்து தாயைக் காண ஓடோடி வந்த மகள்

பிறந்து 40 நாட்களில் தத்துக் கொடுக்கப்பட்ட மகள் 23 ஆண்டுகளுக்குப் பின் தாயைச் சந்தித்துள்ள சம்பவம் சேலத்தில் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தின் காடையாம்பட்டி அருகே உள்ள தாசசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவருக்கு கமலா என்ற முதல் மனைவி உள்ள நிலையில் அமுதா என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஜெனிபர், அமுதவல்லி என்ற இரண்டு மகள்கள் பிறந்தனர். ரங்கநாதன் இரண்டு மனைவிகளுக்கும் பணம் ஏதும் கொடுக்காமல்  சம்பாதிக்கும் பணத்தை குடித்து செலவழித்து வந்துள்ளார்.

இதனால் அமுதா இரண்டாவது குழந்தையை வளர்க்க முடியாமல் கஷ்டப்பட்ட நிலையில் குழந்தை பிறந்த 11 வது நாள் சேலம் கிறிஸ்தவ மி‌ஷனரியில் தத்து கொடுத்துள்ளார்.

அதன்பின்னர் மிஷனரி மூலம் நெதர்லாந்து தம்பதியினருக்கு குழந்தை தத்துக் கொடுக்கப்பட நெதர்லாந்தில் வளர்ந்த அமுதவல்லி 23 வயது ஆகும் நிலையில் பிளவர் ஷாப் வைத்துள்ளார்.

சிறு வயதிலேயே அமுதவல்லிக்கு பெற்றெடுத்த தாய் பற்றி வளர்ப்பு பெற்றோர் கூறிய நிலையில் பெற்ற தாயைக் காண அமுதவல்லி விரும்பியதையடுத்து வளர்ப்பு பெற்றோர் சம்மதித்து சேலம் முகவரியை கொடுத்து அனுப்பியுள்ளனர்.

விமானத்தில் சென்னை வந்த அமுதவல்லி மொழிப்பெயர்ப்பாளர்மூலம் தாய் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

23 ஆண்டுகள் கழித்து தன் மகளைப் பார்த்த அமுதா ஆனந்தத்தில் கதறி அழுதுள்ளார். அமுதவல்லி தாய் அமுதாவையும் ஜெனிபரையும் கட்டித் தழுவி அங்கேயே தங்கியுள்ளார்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top