
தமிழகம்
டேட்டிங் ஆஃப்: நாளை கல்யாணம்… இன்று ஜெயிலில் புது மாப்பிள்ளை..!!
தற்போது இணையத்தில் டேட்டிங் ஆஃப்களின் எண்ணிக்கை வரிசையாக வந்து கொண்டு வருகிறது. இதனை பயன்படுத்தி பலரும் பெண்களை குறிவைத்து ஏமாற்றுகின்றனர். மேலும் அவர்களை திருமணம் செய்வது போல் ஆசைகாட்டி அவர்களிடம் இருந்து பணத்தை, நகைகளை பறித்துக் கொள்கின்றனர்.
அந்த வகையில் நாளைய தினம் கல்யாணம் செய்வதாக கூறிய புதுமாப்பிள்ளை இன்றையதினம் ஜெயிலில் இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அதன்படி சமூக வலைதளங்களில் டேட்டிங் ஆப் மூலம் பெண்களிடம் பழகி மோசடி செய்த விக்ரம் வேதகிரி என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விக்ரம் வேதகிரிக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் வில்லிவாக்கம் மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். ரகசிய திருமணம் செய்து ஏமாற்றி விட்டு வேறு திருமணம் செய்து கொள்ளப்போவதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன்னுடைய ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். பெண் வன்கொடுமை, மோசடி, நம்பிக்கை மோசடி, பெண் மானபங்கம் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்களோடு உல்லாசமாக இருந்த அனுபவத்தை ஆபாச கதைகளாக எழுதி விக்ரம் தன்னுடைய செல்போனில் வைத்துள்ளார் என்று பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.
