Entertainment
பல பிரச்சினைகளுக்குப் பின் தலைவரான தர்ஷன்!
கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக காரசாரமாக சென்று கொண்டிருக்கிறது. மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் முதலில் ஃபாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார்.
இவரைத் தொடர்ந்து வாயாடி வனிதாவும் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். இவர்கள் வரிசையில் வர வர ஓவராக்டிங் செய்து வந்த மோகன் வைத்யாவும் வெளியேற்றப்பட்டார்.

தொடக்கத்தில் தோழிகளாக இருந்த சாக்ஷி, அபிராமி, ஷெரின் ஆகியோர் இந்த காதலால் தனித்தனியாக பிரிந்துவிட்டனர். இந்த நிலையில், கடந்த வாரம் நாட்டாமை டாஸ்க் நடந்தது. கீரிப்பட்டி மற்றும் பாம்புபட்டி என்று இரு கிராமங்களாக பிரிந்து வாழ வேண்டும்.
தர்ஷன், முகென் மற்றும் மீரா மிதுன் ஆகியோர் இந்த வாரத்திற்கான தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
இந்த டாஸ்க்கில் அதிக பலூனை யார் உடைக்காமல் வைத்திருக்கிறார்களோ அவர்கள் தான் தலைவர். இதில், தர்ஷன் ஒரு பலூனை உடைக்காமல் வைத்திருந்ததால், இந்த போட்டியில் அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மேலும், இந்த வாரத்திற்கான தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
