தர்ஷா குப்தா உடை குறித்து பேச்சு: நடிகர் சதீஷ்க்கு வலுக்கும் கண்டனம்!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சன்னி லியோன். இவர் தமிழ் சினிமாவில் ‘ஓ மை கோஸ்ட்’ படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தினை வீரசக்தி மற்றும் சசிக்குமார் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

அதே போல் சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ரமேஷ் திலக், ரவி மரியா, மொட்ட ராஜேந்திரன், தங்கதுரை, பாலா, ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வளைச்சு வளைச்சு ஆபாச புகைப்படம்! 3 லட்சம் கேட்டு மிரட்டல்…இயக்குனர் ரன்ஜித் கைது!

சமீபத்தில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் சன்னி லியோன், சதீஷ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.

அப்போது விழாவில் பேசிய சதீஷ் மும்பையில் இருந்து வந்த சன்னி லியோன் தமிழ் கலாச்சாரப்படி சேலை அணிந்து வந்துள்ளார். ஆனால் தர்ஷா குப்தா இவ்வாறு உடையணிவதா? என தெரிவித்தார்.

உஷார்! அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில்..!!

நடிகர் சதீஷின் இத்தகைய பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஆடை என்பது அவரவர் விருப்பம்.. ஆனால் விழாவில் ஒரு பெண்ணை மட்டும் குறிப்பிட்டு பேசுவது தவறானது என தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.