கருப்பு திராவிடன்; பெருமைக்குரிய தமிழன்!-யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம்;

அம்பேத்கர் பிறந்த நாளன்று பிரதமர் மோடியை பற்றி இசைஞானி இளையராஜா கருத்து கூறியிருந்தார். அதோடு மட்டுமில்லாமல் அதற்கு அவரும் விளக்கம் அளித்தார். இது பற்றி நேற்றைய தினம் பாஜக பிரமுகரும் இளையராஜாவின் சகோதரருமான கங்கை அமரன் கூறினார்.

அதன்படி தனது கருத்துக்கு அண்ணன் இளையராஜா பின்வாங்கப் போவதில்லை என்று கூறினார் என்றும், தான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்றும் கூறியதாக கூறினார். அதோடு மட்டுமில்லாமல் எனக்கு அம்பேத்கரும் பிடிக்கும், மோடியும் பிடிக்கும் அதனால்தான் ஒப்பிட்டு கூறினேன் என்றும் இளையராஜா கூறியதாக கங்கை அமரன் கூறினார்.

இந்த நிலையில் இளையராஜாவின் மகன் இன்று இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை போட்டு விட்டு தனது பங்கிற்கு கருத்தினை பகிர்ந்துள்ளார். அதன்படி கருப்பு திராவிடன் பெருமைக்குரிய தமிழன் என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மோடி பற்றிய இளையராஜாவின் கருத்துக்கள் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவரது மகன் யுவன்சங்கர் ராஜா இவ்வாறு பதிவு செய்துள்ளார். இந்தி தெரியாது போடா என யுவன் சங்கர் ராஜா அந்த டீசர்ட் சில ஆண்டுகளுக்கு முன் பேச்சுவார்த்தை பொருளானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment