Entertainment
தர்பார் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு? ஒரு ஆச்சரிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படம் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 34 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
மேலும் சென்னையில் இந்த படம் 2.34 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன சென்னையில் இரண்டு கோடிக்கு மேல் முதல் நாளில் வசூல் செய்த மூன்று படங்களில் இந்த படமும் ஒன்று என்பதும் இதற்கு முன்னர் விஜய்யின் சர்க்கார் மற்றும் ரஜினியின் 2.0 ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே சென்னையில் ரூபாய் 2 கோடிக்கும் மேல் முதல் நாளில் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
நாளை முதல் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை இருப்பதால் இந்த படத்தின் முதல் 10 நாள் வசூல் அபாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு ஒருசில நெகட்டிவ் கமெண்ட்டுக்கள் வெளிவந்தபோதிலும் பெரும்பாலான ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் இந்த படத்டை பாராட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
