இனி ஹேப்பியாக இருங்க.. அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கிய டென்மார்க் அரசு!
கொரோனாத் தொற்று இரண்டு ஆண்டுகளைக் கடந்து நம்மோடு ஒரு உறவினர்போல் பயணிக்கிறது. கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி பலவகையான கட்டுப்பாடுகளை அனைத்து நாடுகளும் விதித்துள்ளது.
மாஸ்க் அணிதல், பொதுவெளியில் சமூக இடைவெளி கடைபிடித்தல், ஆன்லைன் வகுப்புகள், வொர்க் ஃப்ரம் ஹோம், வார இறுதி முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு எனப் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகளுக்கு எப்போது தீர்வு தரும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
தற்போது பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் டென்மார்க் அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கி அறிக்கை விடுத்துள்ளது.
ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் ஒரு நாளைக்கு சுமார் 40,000 முதல் 50,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இந்தத் தொற்றானது மிகக் குறைவு என்று கருதியே டென்மார்க் அரசாங்கம் இந்த முடிவினை எடுத்துள்ளது.
டென்மார்க் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நான்கு நாட்களுக்கு தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டால் போதும் என்று அறிவுறுத்துகிறது.
