
News
கடும் பெட்ரோல் தட்டுப்பாடு: ஆபத்தான முறையில் ரயிலில் பயணிக்கும் பொதுமக்கள்!!
கடந்த சில மாதங்களாக இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி நிலவிவருகிறது. குறிப்பாக பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையின் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட சூழலில் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு பழைய நிலைமைக்கு திரும்பும் என மக்கள் எதிர்பார்த்தனர். இருப்பினும் பொருளாதர தட்டுப்பாடு இலங்கையில் தலை தூக்க ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில் பெரும்பாலான பெட்ரோல் பங்க் நிலையங்களில் பெட்ரோல், டீசல் இல்லை என அறிவிக்கப்பட்டதால் அந்நாட்டு மக்கள் ரயில் இன்ஜினில் ஆபத்தான முறையில் பயனிக்கும் அவல நிலை உருவாகி உள்ளது.
மேலும், வரும் காலங்களில் இரண்டு வேலை மட்டுமே உணவு உண்பதற்கான சூழல் உருவாகும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
