இந்த ஆப்களில் ஏதேனும் உங்கள் மொபைல் போனில் இருக்கிறதா? உடனே அன்-இன்ஸ்டால் பண்ணுங்க..!

மொபைல் செயலி என்பது தற்போது அத்தியாவசமான ஒன்றாகிவிட்டது என்பதும் அனைத்திற்குமே மொபைல் செயலியை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். பண பரிவர்த்தனை முதல் வங்கி பரிவர்த்தனை வரை செய்திகள் தெரிந்து கொள்வது முதல் பல்வேறு பயன்பாடுகளுக்கு மொபைல் ஆப்கள் தற்போது பிளே ஸ்டோரில் கிடைக்கின்றன என்பது தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் போலியான ஆப்களால் நமது மொபைல் போனுக்கு மட்டுமின்றி நாம் வங்கி கணக்கில் உள்ள பணத்திற்கும் ஆபத்து உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சமீபத்தில் 100 போலியான ஆப்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து தற்போது பார்ப்போம்

100க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு ஆப்களில் ஆபத்தான மால்வேர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் போல் தோன்றும் இந்த போலி ஆப்களால் மொபைல் போனில் உள்ள தொடர்புகள், அழைப்புப் பதிவுகள், SMS செய்திகள் போன்ற முக்கியமான தகவல்களை திருடப்படலாம். மேலும் இந்த மால்வேர் ஆடியோ மற்றும் வீடியோவைப் பதிவுசெய்து, ஸ்கிரீன் ஷாட்களையும் எடுக்கும்.

இந்த நிலையில் போலியான ஆப்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை Google Play Store இலிருந்து அகற்றப்பட்டதாக கூறப்பட்டாலும் இன்னும் சில சாதனங்களில் நிறுவப்பட்டிருக்கலாம் என்பதால் அந்த ஆப்கள் உங்கள் மொபைலில் இருந்தால் உடனே அன் இன்ஸ்டால்

ஆபத்தான மால்வேரில் இருந்து பாதுகாப்பாக இருக்க சில குறிப்புகள் இங்கே:

* Google Play Store போன்ற நம்பகமான தளங்களில் இருந்து மட்டுமே ஆப்களை டவுன்லோடு செய்யுங்கள்

* பயன்பாடுகளை நிறுவும் போது எந்த அனுமதிகளை வழங்குகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும்.

* உங்கள் சாதனத்தின் மென்பொருளைப் புதுப்பித்த நிலையில் வைத்திருங்கள்.

* சமீபத்திய மோசடிகள் மற்றும் ஃபிஷிங் தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், மால்வேரில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உங்கள் சாதனத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவலாம்.

ஆபத்தான மால்வேர் என கூறப்படும் ஆப்களின் லிஸ்ட் இதோ:

apps

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.