”விரைவில் திமுக ஆட்சிக்கு ஆபத்து”…பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே !!
தமிழகத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தனது ஆட்சியை கைப்பற்றி தக்க வைத்துள்ளது. இந்த சூழலில் திமுக அரசுக்கு எதிராக பல கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் விரைவில் திமுக ஆட்சிக்கு ஆபத்து வருவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தினகரன்.
அம்பேத்கர் பிறந்த நாளில் சென்னை கோயம்பேட்டில் பாஜக விசிக மோதிக்கொண்டது காட்டுமிராண்டித்தனம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தற்போது ஆளும் கட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துவருவதால் கூடிய விரைவில் திமுகவின் ஆட்சிக்கு ஆபத்து நேரிடும் என கூறினார்.
இதனிடையே இரண்டை இலை வழக்கில் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக தயாராக இருப்பதாக கூறினார். மேலும், அம்பேத்கர்-மோடியை ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா கருத்திற்கு இளையராஜா அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அது அவருடைய தனிப்பட்ட கருத்து என கூறினார்.
