பூமியை கடக்கும் குறுங்கோளால் ஆபத்து! நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

நாம் வாழும் பூமியில் எவ்வளவு விசித்திரங்களும் மர்மங்களும் நிறைந்துள்ளதோ அதைபோலவே விண்வெளியிலும் ஏராளமான ரகசியங்கள் புதைந்துள்ளன. பூமியை போல் உள்ள மற்ற கிரகங்களில் ஏதேனும் உயிரினங்கள் உள்ளதா? அங்கு மனிதர்கள் வாழ முடியுமா என்பது போன்ற ஆராய்ச்சிகளை தொடர்ந்து மனிதர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும், விண்வெளி குறித்து முழுமையாக ஆய்வு செய்வதற்காக விண்வெளியிலேயே நிரந்தரமாக ஆராய்ச்சி மையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர அவ்வபோது செயற்கை கோள்கள் மூலமும் விண்வெளியை கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில் தான் நாசா விஞ்ஞானிகள் ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை கூறியுள்ளார்கள்.

அதாவது வரும் 11ஆம் தேதி அன்று குறுங்கோள் ஒன்று பூமிக்கு மிக அருகில் கடந்து போக உள்ளதாம். 4660 நெரியஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த குறுங்கோள் 330 மீட்டர் சுற்றளவு கொண்டது. அதாவது ஈபிள்டவர் உயரத்தில் இருக்குமாம். பூமியில் இருந்து சுமார் 39 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இந்த குறுங்கோள் பூமியை கடக்கும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து சென்றாலும் இந்த குறுங்கோள் புவியீர்ப்பு மண்டலத்திற்குள் நுழையாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் என்னதான் இவ்வளவு தூரத்தில் பூமியை கடந்து சென்றாலும், இது பூமிக்கு மிகவும் ஆபத்தானது எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த குறுங்கோள் கடந்த 1982 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாம். இது சூரியனை 1.8 என்ற விகிதத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றுவதால், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியை கடந்து செல்கிறதாம். தற்போது பூமியை கடக்க உள்ள இந்த குறுங்கோளால் என்ன ஆபத்து நிகழ போகிறது என்று தெரியவில்லை

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment