Connect with us

மேட்டூர் அணையில் ஒலித்த தண்டோரா.!! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

மேட்டூர் அணை

தமிழகம்

மேட்டூர் அணையில் ஒலித்த தண்டோரா.!! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

எந்த ஒரு ஆண்டும் இல்லாத வகையில் நடப்பாண்டில் மே மாதத்திலேயே மேட்டூர் அணையிலிருந்து நீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது. இது சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏனென்றால் இந்த ஆண்டு மே மாதமே மழை தொடங்கிவிட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல  இடங்களில் நீர்நிலைகள் நிரம்பி கொண்டு வருகின்றன. மேலும் இன்றைய தினம் 9 அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளதாக நீர்வளத் துறை அறிவித்துள்ளது.

அவற்றுள் மேட்டூர் அணையும் ஒன்றுதான். இந்த நிலையில் மேட்டூர் அணையில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் மேட்டூர் அணையிலிருந்து 16-வது கண் பாலம் வழியாக நீர் திறக்கப்படுவதால் தண்டோரா மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர் தலைமையில் வருவாய் துறையினர் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டு வருகின்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் நீரானது சற்று அதிகமாக திறந்து விடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top