ஒரே கல்லுல இரண்டு மாங்கா… டான்ஸ் ப்ளஸ் பாடம்… டீச்சரின் புது முயற்சி….

திரைப்படங்கள்ல காட்ற மாதிரி ஒரு பிரண்ட்லியான டீச்சர்ஸ் ரியல் லைப்ல கிடைக்கறது ரெம்ப அரிதான ஒன்னுங்க. இதுவரைக்கும் நம்ம பார்த்த டீச்சர்ஸ் எல்லாம் ரெம்ப டெரரா தான் இருந்திருப்பாங்க. சின்னதா ஒரு தப்பு பண்ணிட்டா போதும் உடனே பிரம்ப எடுத்து அடி பிண்ணிடுவாங்க.

teacher

ஆனா இப்போ இருக்கற டீச்சர்ஸ்லாம் அப்படி இல்லைங்க ரெம்ப பிரண்ட்லியா ஜாலியா இருக்காங்க. இந்த தலைமுறை பசங்க ரெம்ப கொடுத்து வச்ச பசங்க. அப்படி ஒரு பிரண்ட்லியான டீச்சர பத்தி தாங்க இப்போ நாம பார்க்க போறோம்.

லாக் டவுன் முடிஞ்சு கிட்டத்தட்ட ரெண்டு வருசத்துக்கு அப்பறம் தாங்க பசங்க ஸ்கூலுக்கு போறாங்க. இந்த இரண்டு வருசத்துல நிறைய பசங்க நம்ம என்ன கிளாஸ் படிக்கிறோம்ங்கறதையே மறந்துட்டாங்கனா பார்த்துக்கோங்களேன். அதனால தாங்க பசங்களோட நினைவாற்றலை அதிகரிக்க நடனமாடி பாடம் கற்பித்து வருகிறார் அரசுப்பள்ளி ஆசிரியை கவிதா.

மாணவர்கள் மனச்சோர்வு ஏற்படாமல் உற்சாகமாக பாடங்களை கற்கவே ஆசிரியை கவிதா நடனம் மூலம் கல்வி கற்பிக்கும் உத்தியை கையாண்டு வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் தான் கவிதா.

இவர் தனது வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் எழுத்துக்களை நடனம் மூலம் பயிற்றுவிக்கிறார். பின்னர் வகுப்பு மாணவ மாணவிகளையும் இணைத்து கொண்டு சேர்ந்து நடனமாடி தமிழ் எழுத்துக்களை அவர்களது மனதில் பதிய வைக்கிறார். கொரோனா இடைவெளிக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் முதல் 4 வாரங்களுக்கு பள்ளிகளில் புத்தாக்க பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் தான் மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி பிரபலமான சொடக்கு மேல சொடக்கு போடுது பாடல் நடன அசைவுகளை பயன்படுத்தி க, ங, ச… பயிற்றுவித்து அசத்தி வருகிறார் ஆசிரியை கவிதா.

இதை பார்க்கிற 90’ஸ் கிட்ஸோட மைண்ட் வாய்ஸ் “எங்களுக்கு மட்டும் இப்படி ஒரு டீச்சர் இருந்திருந்தா நாங்களும் படிச்சு முன்னேறிருப்போம்” இதாதான் இருக்கும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment