Connect with us

விநாயகர் சதுர்த்தியில் ஆபாச நடனமோ, பேச்சோ இருக்கக்கூடாது!!! – ஐகோர்ட் உத்தரவு!!

Ganesh

தமிழகம்

விநாயகர் சதுர்த்தியில் ஆபாச நடனமோ, பேச்சோ இருக்கக்கூடாது!!! – ஐகோர்ட் உத்தரவு!!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் விநாயகர் சிலைகளை இரண்டு நாட்களுக்கு வழிப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்வதற்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை அனுமது அளித்துள்ளது.

குறிப்பாக விநாயகர் சிலைகளை நீரில் கரைப்பது, பல்வேறு இடங்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து அனுமதி வழங்ககோரி மதுரை,தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி ஆலோசனை செய்த நிலையில் தற்போது இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இருப்பினும்,பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன் படி, விநாயகர் ஊர்வலத்தில் எந்தவிதமான ஆபாச நடனமோ, பேச்சோ இருக்கக்கூடாது என கூறியுள்ளது.

அதே போல் எந்த ஒரு அரசியல் கட்சி ஜாதி மற்றும் சமூகம் சார்ந்த பாடல்கள் இருக்கவே கூடாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் சார்பாக எந்த ஒரு பேனர்களும் வைக்க கூடாது என்று கூறியுள்ளது.

மேலும், நிபந்தனைகளை மீறி ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு விழா ஏற்பாட்டார்கள் மற்றும் வழக்கை தாக்கல் செய்தவர்களுமே பொறுப்பு ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top