அட வேற லெவல்ல இருக்கே! : முன்னனி நடிகர்களையே தூக்கி சாப்பிடும் சாண்டி மாஸ்டர் பட போஸ்டர்

கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் நடன இயக்குநர் கலா மாஸ்டரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் சாண்டி. சந்தோஷ்குமார் என்கிற சாண்டி தனது திறமையால் நடன இயக்குநராக உருவெடுத்தார். 2014 முதல் திரைப்படங்களில் நடன இயக்குநராக தனது திரைப் பயணத்தை ஆரம்பித்தார். அதுமட்டுமல்லாது பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இவரின் தனித்துவமான நடனம் ரசிகர்களுக்குப் பிடித்துப் போக தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. ரஜியின் காலா, கமலுக்கு விக்ரம் என இவர் திரையுலக சூப்பர் ஸ்டார்களுக்கு நடனம் அமைக்க மார்க்கெட் எகிறியது. சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எடுத்த லியோ படத்தில் சைக்கோ வில்லனாக தனது உருவத்தையே மாற்றி நடிப்பில் மிரள வைத்திருந்தார். விஜய்யுடன் இவர் சண்டையிடும் காட்சிகள் தியேட்டரையே அதிர வைத்தது.

லியோ படம் மூலம் சினிமா முன்னணி நடிகராக உயர்ந்த சாண்டி மாஸ்டர் தற்போது கன்னடத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ரோஸி எனப் பெயரிடப்படுள்ள இந்தத் திரைப்படத்தில் சாண்டி ஆண்டாள் என்னும் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் பா.ரஞ்சித், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் வெளியிட்டனர்.

சிவக்குமார் வரிசையில் சேர்ந்த நானா படேகர் : செல்பி எடுக்க வந்தவரை அடித்த சம்பவம்

அதில் ஒரு காஞ்சனா ராகவா லாரன்ஸ், ஒரு சூப்பர் டீலக்ஸ் விஜய் சேதுபதி ஆகியோர் கலந்த கலவையில் சாண்டி மாஸ்டரும் பெண்வேடம் தரித்துள்ளார். பார்க்கவே மிரட்டலாக இருக்கும் ரோஸி படத்தின் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து மீண்டும் ஒரு சாக்லேட் காபி குடிக்க தயாராகி விட்டார் சாண்டி மாஸ்டர்.

தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகும் ரோசி படத்தை கன்னட இயக்குநர் ஷுன்யா இயக்குகிறார். குரு கிரண் இசையமைக்கிறார். மேலும் இவரின் திரைகுரு கலாமாஸ்டரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து தனது மாணவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டான்ஸ் மாஸ்டராக ஜொலித்த சாண்டி மாஸ்டருக்கு ரோஸி படம் நடிப்பிலும் அவருக்கு ஒரு திருப்புமுனையைக் கொடுக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அடுத்த பிரபுதேவாவாகவும் உருவெடுக்க சாண்டி மாஸ்டருக்கு வாய்ப்புள்ளது என கோலிவுட் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...