Connect with us

தசரா விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி கூடாது!! – ஐகோர்ட் கிளை உத்தரவு!!

ஐகோர்ட் மதுரை

தமிழகம்

தசரா விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி கூடாது!! – ஐகோர்ட் கிளை உத்தரவு!!

தசரா விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் குலசேகரபட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் தரசா நிகழ்ச்சியான மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் கலந்து கொள்வார்கள்.

இந்தநிலையில் தகர நிகழ்ச்சியின்போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுகிறது. அப்போது வெளி மாநிலங்களில் இருந்து அழகிகளை அழைத்து வந்து ஆபாசமான நடன நிகழ்ச்சிகள் நடத்துவதாக புகார் எழுந்தது.

இதற்கு தடை விதிக்க வேண்டும் என திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் அமர்வான் அவை இன்று வந்தது.

அப்போது பேசிய நீதிபதிகள் இது போன்ற நடனங்களால் சமுதாயம் சீரழியாதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, தசரா விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தார்.பின்னர் கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என கூறினார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top