“மேகதாது அணை!” கர்நாடக முதல்வருக்கு கண்டனம் தெரிவித்தார் “ஓபிஎஸ்”

abe61e201cd55b249049d55fe7c805cf

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது.  தமிழகத்தின் முதல்வராக உள்ளார் முகஸ்டாலின். மேலும் நம் தமிழகத்தில் இதற்கு முன்பு வரை பத்தாண்டுகளாக அதிமுகவின் ஆட்சி நடைபெற்றது. மேலும் அதிமுக சார்பில் இந்த பத்தாண்டுகளில் மூன்று முதல்வர்கள் மாறியுள்ளனர் முதலில் செல்வி ஜெயலலிதா இருந்தார். அவரின் மறைவுக்குப் பின்னர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார்.இதனிடையே கட்சிக்குள் சில குழப்பம் உள்ளதால் அதன் பின்னர் கட்சியானது இபிஎஸ் முதல்வராக தேர்வு செய்தது.a0d670759f3684412f6c2e371ba3745a

எனவே தற்போது எதிர்க்கட்சி தலைவராகும் எடப்பாடிபழனிசாமி உள்ளார். இந்நிலையில் தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தற்போது நமது அண்டை மாநில முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார். அதன்படி கர்நாடக முதல்வர் மேகதாது அணை கட்டப்படும் இன்று கூறியதற்கு தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேகதாது அணை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

மேலும் மேகதாது விஷயத்தில் கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதனால் தற்போது அவர் எதிர்க்கட்சியில் எம்எல்ஏவாக இருந்தாலும் மக்களுக்கு குரல் கொடுக்கும் சட்டமன்ற உறுப்பினராக காணப்படுவது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment