அட ஒரே குடும்ப நிகழ்ச்சியில் இருவருமா? புரட்சித் தலைவரோடு தளபதியை ஒப்பிட்டு இணையதளத்தில் பரப்பும் ரசிகர்கள் !
ஒரு சமயத்தில் இவரெல்லாம் ஒரு நடிகரா? என்று பலரும் ஏளனம் செய்த நிலைமையில் தற்போது இவரை போல் ஒரு நடிகராக வேண்டும் என்று நடிகர்களின் பிரியமாக காணப்படுகிறார் தளபதி விஜய்.
இவர் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் சாதனையும் அடுத்த படத்தில் முறியடிக்கும் அளவிற்கு திறமையையும்,ரசிகர் பட்டாளத்தையும் கொண்டுள்ளார். குறிப்பாக நடிகர் விஜய்க்கு குட்டி குட்டி ரசிகர்கள் ஒவ்வொரு இல்லங்களிலும் காணப்படுகிறார்கள். இந்த நிலையில் நடிகர் விஜய்யை எம்ஜிஆர்-ரோடு ஒப்பிட்டு கூறுமளவிற்கு ரசிகர்கள் அவ்வப்போது இணையதளத்தில் கருத்துக்களை கூறுவார்கள்.
அதோடு மட்டுமில்லாமல் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் வெற்றிமாறன் என்ற கதாபாத்திரத்தில் ஒரு சண்டைக் காட்சியில் தியேட்டரில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடந்து வரும்போது நடிகர் விஜய்யும் கீழே நடந்து வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி ரசிகர்கள் மட்டுமின்றி தனது ஒவ்வொரு படத்திலும் நடிகர் விஜய் எம்ஜிஆரை எங்கேயாவது குறிப்பிட்டுக் கூறும் அளவிற்கு நடித்துள்ளார். இவ்வாறு உள்ள நிலையில் ரசிகர்களுக்கு எம்ஜிஆர்-ரோடு ஒப்பிட மற்றொரு வாய்ப்பாக புகைப்படம் ஒன்று இணையதளத்தில் கலக்குகிறது.
அதன்படி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முருங்கக்காய் மூலம் தமிழ் சினிமாவில் பேமஸான இயக்குனர் பாக்யராஜ் திருமணத்தில் கலந்து கொண்டிருந்தார். அதேவேளையில் தளபதி விஜய் பாக்யராஜின் மகன் நடிகர் சாந்தனு திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படத்தை ஒப்பிட்டு இணையவாசிகள் புரட்சித்தலைவரோடு தளபதியை ஒப்பிட்டு வைரலாக்குகின்றனர்.
