தொழில்நுட்ப கோளாறு.. அமெரிக்காவில் விமான சேவைகள் பாதிப்பு!!

அமெரிக்காவில் விமான போக்குவரத்து துறையின் சர்வரில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக அனைத்து விமானங்களும் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை பொறுத்தவரையில் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் பறந்து கொண்டு இருக்கும். இவைகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளாமல் இருப்பதற்காக விமானங்கள் சர்வர் மூலம் கண்காணிப்பவது வழக்கம்.

இந்நிலையில் எந்த தூரத்தில், எவ்வளவு உயரத்தில், எப்போது பறக்கிறது என்பதை கணினி வழியாக பின்பற்றி வருவார்கள். இந்த சூழலில் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான போக்குவரத்து சேவையானது பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எந்தவித அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருப்பதற்காக அனைத்து விமானங்களும் தரையிரங்க வேண்டும் என அமெரிக்கா விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சர்வரை சரி செய்யும் பணி தொடர்ந்து நடைப்பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். இத்தகைய அறிவிப்பால் பயணிகள் மத்தியில் குழப்பமான சூழல் உருவாகி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.