சும்மா ஒரு மணி நேரம் இடைவிடாமல் மழை! 5000 வாழை மரங்கள் சேதம்! விவசாயி வேதனை;
தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. இதன் காரணமாக தலைநகர் சென்னை மற்றும் வட தமிழக மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இவ்வாறு உள்ள நிலையில் தமிழகத்தில் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அவ்வப்போது தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது.
அதுவும் தஞ்சாவூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்ததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக காணப்படுகிறது. தஞ்சாவூர் பகுதியில் பெய்த கன மழையால் வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன.
அதன்படி தஞ்சாவூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பெய்த மழையால் சுமார் 5000 வாழை மரங்கள் சாய்ந்து விழுந்து சேதம் உற்றன. தஞ்சையில் காவிரிப்படுகையில் ஆசனூர், மருவூர், வடுக்குடியில் விவசாயிகள் பல ஏக்கரில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.
நேற்று இரவு சூறை காற்றுடன் கூடிய பலத்த மழை சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாமல் பெய்ததால் ஆசனூர், மருவூர், வடுக்குடியில் வாழை மரங்கள் சேதமடைந்தன. குலை தள்ளி வெட்டுவதற்கு தயாராக இருந்த 5000 வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வாழைத்தார் ரூபாய் 300 முதல் 500 வரை விற்பதால் வாழை மரங்கள் சாய்ந்து விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
