ஈரோட்டில் பள்ளி மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர் கீதா ராணி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரியும் கீதா ராணி என்பவர் குறிப்பிட்ட தலித் மாணவர் 6 பேரை கழிவறையை சுத்தம் செய்ய வைத்தாக கூறப்படுகிறது.
ஆதார் எண் விவரங்களைக் கேட்கக்கூடாது- ரேஷன் கடைகளுக்கு உணவுத்துறை உத்தரவு!!
அப்போது மாணவி ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த மாணவியின் தாயார் விசாரணை நடத்தியதில் பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்தது அம்பலமானது.
இது தொடர்பாக மாணவியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதே சமயம் தலைமை ஆசிரியை தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
குஷியோ குஷி!! உதவி பேராசிரியர்கள் நியமனம் திடீர் ரத்து..!!!
இந்த நிலையில் தற்போது தலைமறைவாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் கீதா ராணி 4 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.