ஆண்டிபட்டி அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தெப்பம்பட்டி பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி கோவில் திருவிழாவின் போது தனியாக விளையாடிக் கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த 37 வயதான பிச்சைமணி என்ற நபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ராஜதானி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பிச்சைமணியை போக்சோ சட்டத்தில் கைது செய்த ராஜதானி போலீசார் சிறையில் அடைத்தனர்