அப்பா முதலில் எனக்கு இந்தப் பெயர் தான் வைத்தார்… அவர் ஜாதி, மத பாகுபாடு பார்க்காதவர்… இளைய கேப்டன் சண்முகபாண்டியன் பகிர்வு…

‘கறுப்புத் தங்கம்’ என்று அழைக்கப்படும், அள்ளிக் கொடுத்து சிவந்த கைகளுக்கு சொந்தக்காரர் தான் கேப்டன் விஜயகாந்த். கேப்டன் என்ற பெயரைக் கேட்டாலே கம்பீரம் தான் நமது நினைவிற்கு வரும். சினிமா பின்புலமே இல்லாமல் தனது விடாமுயற்சியால் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இடம்பெற்றவர்.

1979 ஆம் ஆண்டு ‘இனிக்கும் இளமை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 1984 ஆம் ஆண்டு ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தின் வாயிலாக பிரபலமானார் கேப்டன் விஜயகாந்த். தொடர்ந்து சின்ன கவுண்டர் (1992), கோயில் காலை (1993), சக்கரை தேவன் (1993), எங்க முதலாளி (1993), திருமூர்த்தி (1995) போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தவர். தனது கம்பீரமான பார்வையால் தமிழ் சினிமாவை கட்டிப்போட்டிருந்தவர்.

தன்னை போல் அனைவரையும் நினைத்து மரியாதை கொடுப்பவர். ஷூட்டிங்கில் தனக்கு கிடைக்கும் சாப்பாடு போலவே அணைத்து ஊழியர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற மாற்றத்தை கொண்டு வந்தவர் விஜயகாந்த் அவர்கள். நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து செவ்வனே பணி செய்தவர்.

2000 களின் ஆரம்பத்தில் தே.மு.தி. கட்சி ஆரம்பித்து எதிர்கட்சியாகவும் இருந்தவர். இவருக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கட்சிப் பணிகளை பார்த்து வருகிறார். இளைய மகன் சண்முகபாண்டியன் சினிமாவில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது சண்முகபாண்டியன் தனது தந்தையைப் பற்றி சுவாரிஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால், என் அப்பா சாதி, மத பாகுபாடு பார்க்காதவர். அதனால் முதலில் எனக்கு ‘சவுக்கத் அலி’ என்று பெயர் வைத்திருந்தார். பின்னர் இந்துவாக இருந்துக் கொண்டு இஸ்லாம் பெயரை வைத்தால் பாஸ்போர்ட் எடுப்பது போன்றவைகளில் பிரச்னை வரும் என்று நண்பர்கள் சொன்னதால் சண்முகபாண்டியன் என பெயரை மாற்றி வைத்து விட்டார் என்று கூறியுள்ளார் இளைய கேப்டன் சண்முகபாண்டியன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...