
தமிழகம்
கோலாகலமாக நடைபெற்றது டி.இமானின் இரண்டாது திருமணம் !!
முன்னணி இசையமைப்பாளரான டி. இமான் தனது மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.
குறிப்பாக எங்களின் வாழ்க்கை வெவ்வேறு பாதைகளில் செல்வதாகவும் நானும் தனது மோனிக்காவும் நவம்பர் 2020 முதல் பரஸ்பர சம்மதத்துடன் சட்டபூர்வமாக விவாகரத்து செய்துவிட்டதாக தெரிவித்தார்.
இந்நிலையில் ஊடகங்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் தங்களின் தனி விருப்பமான முடிவுக்கு மதிப்பு கூறுமாறு அவர் கூறினார். இதனிடையே டி. இமான் இரண்டாவது திருமணம் செய்யப்போவதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் கசிந்தன.
இதனை உறுதிபடுத்தும் விதமாக இன்று பிரபல கலை இயக்குனர் உபால் டுவின் மகள் எமிலியை டி.இமான் திருமணம் செய்துள்ளார்.
மேலும், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தெரிகிறது. இவர்கள் திருமணத்துக்கு சோசியல் மீடியாவில் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
