நாளை வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. எங்கெல்லாம் மழை பெய்யும்?

ஒரு பக்கம் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் கோடை மழை காரணமாக குளிர்ந்த வெப்பநிலை பொதுமக்கள் அனுபவித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் நல்ல மழை பெய்து வருகிறது என்றும் நேற்று மாலை வேலூர், காட்பாடி, ஆம்பூர் போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் வங்க கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு மையம் தோன்ற இருப்பதை அடுத்து தமிழகத்தின் கடற்கரை ஓரப்பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என செய்திகள் வெளியாகி உள்ளன.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும் என்றும் அதன் காரணமாக மே 7ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மே 8ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நடந்து மத்திய வங்க கடல் பகுதியில் புயலாக வலுப்பெற போதும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அக்னி நட்சத்திர வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் நிலையில் புயல் தோன்றி இருப்பது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்த புயலின் தாக்கம் மே 10ஆம் தேதிக்கு பிறகு இருக்காது என்றும் அதன் பிறகு மீண்டும் அக்னி நட்சத்திர  வெயில் உக்கிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SUMMERஎனவே அக்னி நட்சத்திரம் முடியும் நாள் வரை அதாவது மே 28ஆம் தேதி வரை பொதுமக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தேவை இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தது. இந்த மழை காரணமாக அந்நகரில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியுடன் உள்ளனர். அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் நல்ல மழை பெய்ததாகவும் வேலூரில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக அதை மின்னலுடன் மழை பெய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வாணியம்பாடி பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது என்றும் மழை பெய்த அனைத்து இடங்களிலும் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews