திருமண நிகழ்ச்சியில் சோகம்! சிலிண்டர்கள் வெடித்து 2 குழந்தைகள் பலி

ராஜஸ்தானில் திருமண வீட்டில் ஏற்பட்ட சிலிண்டர் ம்விபத்தில் 2 குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே வட மாநிலங்களை பொறுத்தவரையில் விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அடுத்த புங்ரா என்ற கிராமத்தில் திருமணம் நடைப்பெற்றதாக தெரிகிறது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

நள்ளிரவு முதல்! ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்..!!

இந்நிலையில் திருமண வரவேற்பிற்காக உணவு சமைத்து கொண்டிருந்த போது திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதாக தெரிகிறது. இதில் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

அப்போது சம்பவ இடத்திலேயே 2 குழந்தைகள் பலியானதாகவும், 50-க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மாண்டஸ் புயல்: சென்னையில் ஏழு விமான சேவை ரத்து..!!

இதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், பலபேர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கியாஸ் சிலிண்டர்களில் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.