சிலிண்டர் விலை எதிரொலி: ஹோட்டல், டீ விலை உயரும் அபாயம்!!

உக்ரைன் – ரஷ்யா:

உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கிடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போனது. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் எச்சரிக்கை விடுத்தப்போதிலும், கடந்த ஆண்டு கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மீது ரஷ்யா உக்ரைன் மீது குண்டுமழை தாக்குதல் நடித்தியது.

சர்வதேச சந்தை நிலவரம்:

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையினை நிர்ணயம் செய்கின்றனர்.

வணிக சிலிண்டர் விலை: 

வருடத்தின் முதல் நாளிலே வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையானது ரூ.25 உயர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக உணவன உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உணவகங்களில் விலை உயரும் அபாயம்:

ஹோட்டல்கள், டீக்கடைகள் உள்ளிட்டவற்றில் உணவுப் பொருட்களின் விலைஉயரும் அபாயம் ஏற்படும் என உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகை தகவல் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.