சிலிண்டர் விலை மீண்டும் குறைவு!! எவ்வளவு தெரியுமா?

ஒவ்வொரு மாதமும் எண்ணை நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் கொண்டுவருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதேசமயம் உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலையானது கிடுகிடுவென அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் இன்றைய தினத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளனர். அதன் படி, 19 கிலோ எடை கொண்ட வர்த்தகரீதியான கேஸ் சிலிண்டர் விலை ரூ.35.50 குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது 19 கிலோ எடை கொண்ட வர்த்தகரீதியான கேஸ் சிலிண்டர் விலை ரூ.35.50 குறைக்கப்பட்டுள்ளது.  அதன் படி, ரூ.2,008.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 14.2 கிலோ எடைகொண்ட எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.1068.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதால் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்று மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.