ஆண்டின் முதல் நாளே இப்படியா? சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!!

ஒவ்வொரு மாதமும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை உயர்த்துவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் புத்தாண்டின் முதன் நாளிலே சிலிண்டர் விலையை உயர்த்தி இருப்பது சாமானிய மக்கள் மத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் டெல்லி, மும்மை, தமிழகம், கொல்கத்தா போன்ற மாநிலங்களில் வர்த்தக சிலிண்டர்களுக்கு விலை கூடுதலாக ரூ.25 அதிகரித்துள்ளது. அதாவது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.25 அதிகரித்து காணப்படுகிறது.

புத்தாண்டு விதிமீறல்: 252 பேர் மீது வழக்கு பதிவு!!

அதே போல் சென்னையில் 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,917க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக மும்மையில் ரூ.1721 ஆகவும், டெல்லி ரூ.1769 ஆகவும், கொல்கத்தா ரூ.1870 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனை தொடர்ந்து வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை எவ்வித மாற்றமின்றி ரூ.1,068.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கடந்த ஒரு ஆண்டுகளில் மட்டும் சிலிண்டர் விலை ரூ. 153.5 என அதிகரித்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.