ரஷ்ய ,உக்ரைன் போர் காரணமாக பல்வேறு இழப்புகள் நிலவி கொண்டு வருகிறது. அதைவிட நம் இந்தியாவுக்கும் இது பெரும் பாதிப்பை உண்டாக்கியது காணப்படுகிறது. ரஷ்யா உக்ரேன் மீது போர் தொடுத்து அன்றைய தினம் தமிழகத்தில் தாறுமாறாக தங்கத்தின் விலை உயர்ந்தது.
இந்த விலை உயர்வு எந்த முறையும் இல்லாத வகையில் ஆயிரக்கணக்கில் விலை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டுமல்லாமல் கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்தது என்பதும் உண்மை தான்.
இவ்வாறு அடுத்தடுத்து இந்தியாவிற்கும் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. போர் காரணமாக மட்டுமின்றி ஏற்கனவே நம் இந்தியாவில் நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சென்னையில் சிலிண்டர் விலை 105 ரூபாய் உயர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் விலை 105 ரூபாய் உயர்ந்து ஒரு சிலிண்டர் 2145.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இருப்பினும் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லை என்றும் அதன் விலை ரூபாய் 915.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.