வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு: உணவக உரிமையாளர்க பேரதிர்ச்சி !!

சென்னையில் வணிக பயன் பயன்பாட்டிற்கான சிலிண்டர்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால்  தேநீர் கடைகள், உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர் ஒன்று ரூ.2,119. 50 காசுகளுக்கு  விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலையினை எண்ணெய் நிறுவனங்கள் இன்று உயர்த்தியுள்ளனர்.

அதன் படி 19 கிலோ எடை கொண்ட ஒரு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.268.50 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.2,406-க்கு விற்பனை செய்யப்படுகிறது . இதனால் தேநீர், உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களின் விலை 600 ரூபாய் அளவிற்கு உயர்த்தப்பட்டு இருந்தாலும், வீட்டு உபயோகத்திற்காக சிலிண்டர் விலையும் தற்போது உயர்த்தப்படவில்லை.

இருப்பினும், எரி பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால் உணவு பொருட்களின் விலை மேலும்  உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment