சிலிண்டர் வெடித்து விபத்து: கோவையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்!!

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதை தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக நின்றிருந்த மாருதி கார் ஒன்று அதிகாலை திடீரென பயங்கரமாக வெடித்து சிதறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதிர்ச்சி! ஆன்லைனில் விஷம்… கல்லூரி மாணவன் தற்கொலை..!!

பின்னர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில் காரில் பொருத்தப்பட்டிருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானதாகவும், காரில் இருந்த ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த விபத்து காரணமாக கோவை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகமாக கூடும் பகுதிகள், தேவாலயங்களில் பலத்த போலீஸ் பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது.

தீபாவளி! பூக்களின் விலை கடுமையாக உயர்வு..!!

மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வருவதாகவும், விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment