சேலத்தில் சிலிண்டர் வெடிப்பு: மூதாட்டி உயிரிழப்பு! சிக்கிய மூவரின் கதி? சிறுமி மீட்பு;

இந்தியாவில் பல இடங்களில் சிலிண்டர் வெடிப்பு நிகழ்கிறது. இதனால் பல உயிர் சேதங்கள் நிகழ்கின்றன.இந்த நிலையில் தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் சிலிண்டர் வெடித்து மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சேலத்தில் சிலிண்டர் வெடிப்பு

 

அதன்படி சேலம் மாவட்டத்தில் சிலிண்டர் வெடித்து அருகில் உள்ள 4 வீடுகள் தரைமட்டமாகி தகவல் வெளியாகி உள்ளது. சேலத்தில் சிலிண்டர் வெடித்து தரைமட்டமான வீட்டின் இடிபாடுகளில் சிக்கிய சிறுமி உயிருடன் மீட்கப்பட்ட கூறப்படுகிறது.

ஆனால் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி ராஜலட்சுமி உயிரிழந்துள்ளார். இந்த மூதாட்டிக்கு 80 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்த 12 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இடிபாடுகளில் சிக்கியிருக்கும் மேலும் 3 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் சேலத்தில் சிலிண்டர் வெடித்த பகுதிக்கு ஜேசிபி மூலமாக தகர்க்கப்பட்ட வீடுகள் அப்புறப்படுத்தப்படுகிறது. அங்கு தீயணைப்பு வீரர்கள் போலீசார் என பலரும் குவிந்துள்ளனர்.சிலிண்டர் வெடித்த அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.இடிபாடுகளில் சிக்கியுள்ள 3 நபர்களின் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் அவர்களுக்காக காத்துக் கொண்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment