குடோனில் சிலிண்டர் விபத்து: நாமக்கல்லில் பரபரப்பு!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த பழைய குடோனில் சிலிண்டர் வெடித்து வெடித்து விபத்துக்குள்ளானதால் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகியது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நேருநகர் பகுதியை சேர்ந்த சேகர் என்பவருக்கு பழைய இரும்பு குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் மது பாட்டில்கள், லாரி உதிரி பாகங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிரது.

இந்நிலையில் மதிய நேரத்தில் குடோனில் புகையுடன் தீப்பற்றியது. பின்னர் மளமளவென குடோன் முழுவதும் தீ பரவ தொடங்கியது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் சுமார் பத்து லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.