தூத்துக்குடி துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்: மீண்டும் புயலா?

சமீபத்தில் மான்டஸ் புயல் சென்னை மற்றும் மகாபலிபுரம் இடையே கரையை கடந்தது என்பதும் இந்த புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மாண்டஸ் புயல் பாதிப்பிலிருந்து இன்னும் ஒரு சில பகுதிகளில் மக்கள் மீண்டு வராத நிலையில் மீண்டும் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றி இருப்பதாகவும் இந்த தாழ்வு மண்டலமாக மாறி தென் மாவட்டங்களில் கன மழை கொடுக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தூத்துக்குடி பகுதியில் புயலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடி மட்டுமன்றி திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த புயல் இந்தியா மற்றும் இலங்கை இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இலங்கையிலும் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.