’மோக்கா’ புயலால் எந்தெந்த பகுதிகளுக்கு பாதிப்பு.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நாளை காற்றழுத்த மண்டலமாக மாறும் என்றும் அதன் பின்னர் நாளை மறுநாள் புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் இந்த புயலுக்கு ’மோக்கா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த புயல் காரணமாக எந்தெந்த பகுதிகளுக்கு பாதிப்பு என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ’மோக்கா’ புயல் காரணமாக தென் மாநிலங்களில் நல்ல மழை பெய்யும் என்று கூறியுள்ளது. அந்தமான் நிக்கோபார் திவுகளில் பரவலாக கன மழை பெய்யும் என்றும் அதேபோல் ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.

மேலும் ’மோக்கா’ சூறாவளி காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பலசோர், பத்ரக், ஜாஜ்பூர், கேந்திரபாடா, கட்டாக் மற்றும் பூரி உள்பட சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று அடுத்த மூன்று நாட்களுக்கு ஆந்திராவில் அதிக மழைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒரிசா மாநிலத்தில் உள்ள ஆகிய பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அடுத்து ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் வரவிருக்கும் ‘மோக்கா’ சூறாவளிக்கு எதிராக மாநிலத்தின் மீட்பு படையை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

‘மோக்கா’ புயல் காரணமாக தமிழகத்தில் பெரிய அளவு பாதிப்பு இருக்காது என்றும் தமிழகத்தில் பெரிய அளவில் கனமழையும் இருக்காது என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் கடலோர பகுதியில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று கூறப்படுகிறது. இந்த புயல் ஒடிசா, மேற்குவங்காளம் வழியாக வங்கதேசத்தில் கரையை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews