#Breaking வலுவிழந்தது மாண்டஸ் புயல் ஆனால்; நாளை காலை நடக்கப்போகும் தரமான சம்பவம்!

தென்மேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல் வலுவிழந்து புயலாக மாறியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு தென்கிழக்கே 260 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு – தென்கிழக்கே 180 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் நிலைகொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் தீவிர புயலாக நகர்ந்து வந்த மாண்டஸ், தற்போது வலுவிழந்து தீவிர புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலையில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஓட்டி கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காற்றின் வேகம் குறைந்ததால் நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது 100 கிலோ மீட்டர் அளவுக்கு காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.