மாண்டஸ் புயல்: சென்னையில் ஏழு விமான சேவை ரத்து..!!

மாண்டஸ் புயலின் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் 7 விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி தொடங்கியது. இதன் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகள் கடல் போல் காட்சியளித்தது.

நள்ளிரவில் கரையை கடக்கும் புயல்… எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

இந்நிலையில் வங்கக்கடல் பகுதியில் புதிதாக மாண்டஸ் புயல் உருவாகி கடலோர பகுதிகளில் பலத்த கனமழை பெய்து வருகிறது. அதோடு புயல் முன்னெச்சரிக்கையாக 7 விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன் படி கொழும்பு, தூத்துக்குடி, கடப்பா, முப்மை செல்லும் ஜெட் விமானங்கள் உள்ளிட்டவைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இலங்கை, தூத்துக்குடி மற்றும் கடப்பாவில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

குஷியோ குஷி!! 4 மாவட்டங்களில் விடுமுறை.. கொண்டாட்டத்தில் மாணவர்கள்..!!!

மேலும், மோசமான வானிலை மற்றும் புயலின் வேகம் உள்ளிட்டவைகள் குறித்து சில விமான சேவைகள் ரத்து செய்யப்படலாம் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் விமான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.